`சட்டரீதியாக வழக்கைச் சந்திக்க தயார்' - 10 மாதங்களுக்குப் பிறகு வெளியில் வந்த முருகன், கருப்பசாமி! | srivilliputhur court bail approved to professor murugan and karuppasami

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (20/02/2019)

கடைசி தொடர்பு:10:15 (20/02/2019)

`சட்டரீதியாக வழக்கைச் சந்திக்க தயார்' - 10 மாதங்களுக்குப் பிறகு வெளியில் வந்த முருகன், கருப்பசாமி!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிபேராசிரியர் முருகன், பி.எச்டி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

முருகன்

`தாங்கள் அப்பாவிகள், இந்த வழக்குக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, யாரையோ காப்பாற்ற எங்களை பொய்யாக இவ்வழக்கில் சேர்த்துள்ளனர்' என்று முருகனும், கருப்பசாமியும் முறையிட்டும் அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் விசாரணை நீதிமன்றம் முதல், உயர் நீதிமன்றம் வரையில் பிணை மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ததில் அவர்களுக்கு கடந்த 14-ம் தேதி பிணை கிடைத்தது. அந்த ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டபின் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர்களை வரவேற்க முருகன், கருப்பசாமியின் உறவினர்கள் மதுரை சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். வெளியில் வந்த அவர்களை கண்ணீருடன் வரவேற்றனர்.

பின்பு  செய்தியாளர்களிடம்  பேசிய  முருகன், ``என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு, அதை சட்டரீதியாக சந்திப்பேன், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதைப்பற்றி விரிவாக பேச முடியாது," என்று கூறிவிட்டு கிளம்பினார். தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய அருப்புக்கோட்டை நிர்மலாதேவி வழக்கில் இரண்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம் இவ்வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாதேவியும் தனக்கு பிணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close