அ.தி.மு.க கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்! - தொகுதிக்காக நடக்கிறது பேச்சுவார்த்தை | tmc and puthiya tamilazhakam will join to admk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (20/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (20/02/2019)

அ.தி.மு.க கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்! - தொகுதிக்காக நடக்கிறது பேச்சுவார்த்தை

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா, புதிய தமிழகம் கட்சிகள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.கே.வாசன்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்பதால் கூட்டணி குறித்த இறுதிப் பங்கீட்டில் கட்சிகள் தீவிரம் காட்டியுள்ளன. தமிழகத்தில் முதல் ஆளாக அ.தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீட்டைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டது. பா.ம.கவுக்கு 7 தொகுதிகள், பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் என அ.தி.மு.க ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க வர வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகிறது. அந்தக் கட்சியிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

கிருஷ்ணசாமி

இதற்கிடையே, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க சார்பில் மின்துறை அமைச்சர் தங்கமணியும், த.மா.கா சார்பில் விடியல் சேகரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தங்கமணி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே, சென்னை விமான  நிலையத்தில் பேசிய வைகைச்செல்வன், ``த.மா.கா, , புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக இன்று மாலை அல்லது நாளைக்குள் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close