`நிஜமாகவே எனக்குப் பெரிய விஷயம்தான்!'- ஆச்சர்யப்படும் 'மைனா' நந்தினி | serial actress nandhini talks about her personal

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (20/02/2019)

கடைசி தொடர்பு:13:06 (20/02/2019)

`நிஜமாகவே எனக்குப் பெரிய விஷயம்தான்!'- ஆச்சர்யப்படும் 'மைனா' நந்தினி

எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவர் 'மைனா' நந்தினி'. டிக்டாக்கில் இவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் இவருக்கென தனி ஆர்மியே உள்ளது. திடீரென இவ்வளவு பொலிவு எப்படி சாத்தியமாச்சு எனக் கேட்கவும் புன்னகைத்துப் பேசத் தொடங்கினார்.

போட்டோ எடுக்கும்போது நான் எப்பவும் நார்மல் மோடுல போட்டோ எடுக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச பில்டர்ஸ் யூஸ் பண்ணி தான் போட்டோ எடுப்பேன். அது போலியா தெரிஞ்சாகூட பிரவாயில்ல. ஏன்னா, எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி முன்னாடி என்ன வெயிட் இருந்தேனோ அதை அப்படியே தான் மெயின்டெயின் பண்றேன். என் கன்னங்கள் எப்பவும் புஸ்ஸுனுதான் இருக்கும். அதை வைச்சுப் பார்க்குறப்போ நான் குண்டா இருக்கிற மாதிரி தெரியும். ஆனா, உண்மையில் ஒரே எடையைத் தான் மெயின்டெயின் பண்றேன். 

'மைனா' நந்தினி

டிக்டாக் பொழுதுபோக்குக்காக பண்ற விஷயம்தான். நடிக்கிறது நமக்குப் பிடிச்ச விஷயம். ஒரு மில்லியன் பேர் என்னைப் ஃபாலோ பண்றாங்கங்குறது நிஜமாகவே எனக்குப் பெரிய விஷயம். ஃப்ரீ டைம் கிடைச்சா இப்போலாம் என்னுடைய பொழுதுபோக்கே டிக்டாக் வீடியோ பண்றதுதான். மீடியாவுக்காக சில விஷயங்களை நாம செய்ய வேண்டியிருக்கும். உண்மையைச் சொல்லணும்னா  இப்போ வரைக்கும் என் காருக்கு நான் டியூ கட்டிட்டுதான் இருக்கேன். பெரிய பணக்காரியாகணுங்குற ஆசையெல்லாம் இல்லங்க. இன்னைக்கு வாழுற வாழ்க்கையைச் சந்தோஷமா வாழணும் அவ்வளவு தான்.

எனக்கு முத்தாரம்மன் ரொம்பப் பிடிக்கும். சந்தோஷம், துக்கம் எல்லா நேரத்திலும் முத்தாரம்மனை நினைச்சிப்பேன். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிற சூழ்நிலையில், அந்தச் சமயத்தில் எனக்கு எங்கே போகத் தோணுதோ அங்கே போவேன். இல்லைன்னா,  என் தம்பி, அப்பா, அம்மா கூட ஏதாவது வம்பு பண்ணிட்டு இருப்பேன். வீட்டில் யாருமில்லாதப்போ ஸ்ட்ரெஸ்ஸோட தனியா  இருக்க மாட்டேன். எங்கேயாச்சும் கிளம்பி போயிடுவேன் எனப் புன்னகைக்கிறார், நந்தினி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close