`யாரையும் விமர்சிக்காதீங்க; இலக்குதான் நமது குறிக்கோள்!’ - ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுரை | Rajini makkal mandram vellore district meet held

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (20/02/2019)

கடைசி தொடர்பு:17:05 (20/02/2019)

`யாரையும் விமர்சிக்காதீங்க; இலக்குதான் நமது குறிக்கோள்!’ - ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுரை

‘‘மற்ற கட்சிகள் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்போம். சட்டமன்றத் தேர்தலே நம்முடைய இலக்கு. மக்கள் மனதில் இடம்பிடிக்க களப்பணிகளில் தீவிரம் காட்டுங்கள்’’ என்று வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். மேலும் அவர், ‘‘தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் என்னுடைய இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. என்னுடைய படம், மன்றத்தின் கொடியை, எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என்று நீங்கள் யாரை நம்புகிறீர்களோ, அவர்களுக்குச் சிந்தித்து வாக்களியுங்கள்’’ என்று ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்றத்தினருக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், வேலூரில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி பேசுகையில், ‘‘சட்டமன்றம்தான் நம்முடைய இலக்கு என்று ரஜினி கூறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் நம் மீது வைக்கப்படும் விமர்சனங்களைத் தவிர்ப்போம். மற்ற கட்சிகளை நாமும் விமர்சிக்கக் கூடாது. நமக்குள் மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், போட்டி, பொறாமைகள் இருந்தாலும், அதைக் கடந்து ஒற்றுமையாக இலக்கை நோக்கிப் பயணிப்போம். குறிப்பாக, கவனமாக இருப்போம். நகரம், ஒன்றிய பகுதிகளில் களப்பணிகளைத் தீவிரப்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடிப்போம். எக்காரணத்தைக் கொண்டும் ரஜினியின் படம், மன்றத்தின் பெயரை, எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பயன்படுத்தக் கூடாது’’ என்று ஆலோசனை வழங்கினார்.


[X] Close

[X] Close