`கட்சிகளுக்குப் பணம் அளிக்காதீர்கள்!'- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தமிழக ஆளுநர் அட்வைஸ் | Tamilandu governor advises NRIs about donation to political parties

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (20/02/2019)

கடைசி தொடர்பு:15:56 (20/02/2019)

`கட்சிகளுக்குப் பணம் அளிக்காதீர்கள்!'- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தமிழக ஆளுநர் அட்வைஸ்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் கூட்டணிகுறித்த பேச்சுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வெளிநாடு வாழ் இந்தியர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் அளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித்

சென்னை  ராயப்பேட்டையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம். கஸ்தூரி & சன் குழுமத் தலைவர்  என்.முரளி, லீ ராயல் மெரிடியன் குழுமத் தலைவர் பழனி.ஜி.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

பன்வாரிலால் புரோஹித்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், அங்கு சம்பாதித்த பணத்தைத் தன் சொந்த  நாட்டின் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லப் பயன்படுத்துவது மிக உயர்ந்த செயல்பாடாகும். இந்தியாவில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகளுக்கு அதிகமான பணம் தேவைப்படும். அவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் தேர்தல் நிதி கேட்பார்கள். இது  மாதிரி நிதி கேட்கும் அரசியல் கட்சிகளுக்கு யாரும் பணம் கொடுக்காதீர்கள். அப்படி நீங்கள் கொடுக்கும் பணம், வாக்காளர்களிடமிருந்து ஓட்டுகளைப் பெறத்தான் பயன்படுத்தப்படும். மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தால், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்து உதவுங்கள்” என்றார்.


[X] Close

[X] Close