`பாதுகாப்பு கொடுங்க!' - விருதுநகர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் | Virudhunagar Lovers seeks production

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (20/02/2019)

கடைசி தொடர்பு:19:50 (20/02/2019)

`பாதுகாப்பு கொடுங்க!' - விருதுநகர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு வழங்கக் கோரி, காதல் ஜோடி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது.

காதல்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன், மகாலிங்கம் (21). இவர், கிருஷ்ணன்கோயிலில் உள்ள கல்லூரியில் துப்புரவுப் பணியாளராக உள்ளார். பக்கத்து கிராமமான அய்யம்பட்டியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகள், முத்துசெல்வி (19). இவர், திருவில்லிபுத்தூரில் உள்ள நகைக்கடையில் பணியாற்றிவருகிறார்.

மகாலிங்கமும் முத்துசெல்வியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சாதியினர் என்பதால், இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்தனர்.

இந்நிலையில், பெண் வீட்டார் முத்துசெல்வியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். எனவே, மகாலிங்கம், முத்துசெல்வி ஆகிய 2 பேரும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர். பின்னர், அவர்களைக் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். இருவீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


[X] Close

[X] Close