புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் - கனிமொழி | the central government should answer the attack on the crpf soldiers says Kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (20/02/2019)

கடைசி தொடர்பு:20:45 (20/02/2019)

புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் - கனிமொழி

``போர் இல்லாத நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குக் கவனக்குறைவும் உளவுத்துறையின் தோல்வியும்தான் காரணம். மத்திய அரசு இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்னுமிடத்தில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் வீர மரணமடைந்தனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாபேரியைச் சேர்ந்த சுப்பிரமணியமும் ஒருவர். வீர மரணம் அடைந்த சுப்பிரமணியத்தின் உருவப்படம் மற்றும் சமாதிக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

திமுக எம்.பி கனிமொழி

இந்நிலையில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி சுப்பிரமணியத்தின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை   நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கும், சமாதி இடத்திற்கும் சென்று மலர்தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  பேசுகையில். ``போர் ஏதும் நடைபெறாத சூழலில் குண்டுவெடிப்பால் 44 போர் வீரர்களை இழந்திருக்கிறோம்,  இது மிகவும் வருந்தத்தக்கது இப்படிப்பட்ட சம்பவம் நடப்பதற்கு கவனக்குறைவும், உளவுத்துறையின் தோல்வியும்தான் காரணம். மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என்ற கேள்வி எழுகிறது.. இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close