விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சிவகங்கை நகரமைப்பு மண்டல துணை இயக்குநர்! | Vigilance raid in sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (20/02/2019)

கடைசி தொடர்பு:10:14 (21/02/2019)

விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சிவகங்கை நகரமைப்பு மண்டல துணை இயக்குநர்!

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத சுமார் 50,000 பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம். இங்கு துணை இயக்குநராக தற்சமயம் காவியா என்பவர் பணியில் இருந்துவருகிறார். இந்நிலையில் இங்கு அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் அந்த அலுவலகத்தில் டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் இருப்பிடத்திலிருந்து 24,970 ரூபாயும், துணை இயக்குநர் காவியாவின் காரில் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த 26,020 ரூபாயும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து நகரமைப்புத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.``தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த உத்தரவால் இந்தத் துறை அதிகாரிகள் கொடிகட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அனுமதி பெறாத பிளாட்கள் அனைத்தும் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் ரியல் எஸ்டேட்  தொழில் நடத்துபவர்கள் பிளாட்கள் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதான் பணம் கொழிக்க காரணம். ஒவ்வொரு மாதமும் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரைக்கும் கப்பம் கட்ட வேண்டும். மண்டல துணை இயக்குநர் காவியா மீதும் லஞ்சப் புகார் இருந்து வந்தது. அதேநேரத்தில் இதற்கு முன் இதே பதவியில் இருந்த அதிகாரியின் சூழ்ச்சியாகக் கூட இந்த ரெய்டு இருக்கலாம். விஜிலென்ஸ் ரெய்டின் போது ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக் கொடுத்த பணம் பற்றிய பட்டியல் கைப்பற்றப்பட்டிருக்கிறது’’ என்கின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close