தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி! - தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு! | 10 Lok Sabha seats have been given to Congress - DMK President MK Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (20/02/2019)

கடைசி தொடர்பு:21:23 (20/02/2019)

தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி! - தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு!

மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மும்முரமாகியுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், தொகுதிப் பங்கீடுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறக் கூடாது என்பதில் ராகுல் கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். இந்நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தருவதாகக் கூறிய தொகுதிகள்குறித்து ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேணுகோபால், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின்

இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். அவர்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.  முகுல் வாஸ்னிக், மு.க.ஸ்டாலின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அபோது பேசிய மு.க.ஸ்டாலின்,. ``2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளுடன் புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எந்தெந்தத் தொகுதிகள் என்பது கூட்டணிக் கட்சிகளை அழைத்து முடிவுசெய்து அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளித்த பின்னர், மீதமுள்ள தொகுதிகளில் தி.மு.க போட்டியிடும். ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல், வெளிப்படையாக கூட்டணிகுறித்து அறிவித்துள்ளோம்’’ என்றார்.
 


[X] Close

[X] Close