`ரேஷன் பொருள்கள் முதல்வர் அனுமதியோடுதான் கடத்தப்படுகின்றன!' - காந்தி செல்வன் குற்றச்சாட்டு | Former minister gandhiselvan slams edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:07:30 (21/02/2019)

`ரேஷன் பொருள்கள் முதல்வர் அனுமதியோடுதான் கடத்தப்படுகின்றன!' - காந்தி செல்வன் குற்றச்சாட்டு

ரேஷன் பொருள்களை எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி துணையோடும், ஆசீர்வாதத்தோடும் சிலர் கடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.

திமுக

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. சார்பில் 175 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இக்கூட்டங்களில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்த தி.மு.க-வினர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து அந்த மனுவை அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, 'ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் மிகவும் பாதித்துள்ள கடுமையான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். குறிப்பாக ஆழ்துளை கிணறுகளில் பழுதாகி உள்ள மின்மோட்டார்களை சரிசெய்து, குடிநீர் பிரச்னைக்குக் தீர்வு காண வேண்டும். 

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்படாத நிலை உள்ளது. மேலும், மளிகை பொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படும் நிலையும் உள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்யவோ அல்லது மூடவோ ஆவன செய்திட வேண்டும். மேலும், சந்துகளில் செயல்படும் சட்ட விரோத மதுக்கடைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

திமுக

இதுபற்றி முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனிடம் பேசியபோது, 'அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்த திண்ணை பிரசாரம் தளபதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிராம சபை கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.ரேஷன் கடையில் 300 ரூபாய்க்கு மளிகை வாங்கினால்தான் ரேஷன் பொருள்களைப் பெறமுடியும் என்று மக்களை நிர்பந்திக்கிறார்கள். இங்க இருக்குற அமைச்சர்  எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு தெரிஞ்ச கடைகளோட பொருள்களை ரேஷன் கடையில் விற்கிறார்கள். ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை கூட இவர்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா, கேரளா என  அண்டை மாநிலங்களுக்கு அரிசி, பருப்பு என்று ரேஷன் பொருள்களை எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  துணையோடும், ஆசீர்வாதத்தோடும் சிலர்  கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சி ஒழிந்தால்தான் இதற்கெல்லாம் தீர்வுகட்ட முடியும். பொதுமக்களின் அடிப்படை பிரச்னை குறித்த எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பெண்களைத் திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close