நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறாரா முகிலன்? | Environmentalist mugilan may Appear in court

வெளியிடப்பட்ட நேரம்: 10:37 (21/02/2019)

கடைசி தொடர்பு:10:37 (21/02/2019)

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறாரா முகிலன்?

முகிலன்

சில நாள்களாகக் காணாமல் இருந்த சூழலியல் போராளி முகிலன் இன்று போலீஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவதாக அவரின் நண்பர்கள் வழியாகக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார் முகிலன். இதற்கடுத்து மறுநாள் மதுரையில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மதுரைக்குச் செல்லும் மகால் எக்ஸ்பிரஸில் பயணம் செய்வதாக இருந்த அவர் மறுநாள் மதுரை சென்றடையவில்லை.

அதனால் அவர் பிற செயற்பாட்டாளர்களால் பல வகையிலும் தேடப்பட்டு வந்தார். பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போலீஸில் புகார் அளித்துவந்தன. நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு, நாளை (22.2.2019) விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே முகிலன் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் அவரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன. எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுப்படுகிறார் என்பது குறித்தான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close