தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி - அ.தி.மு.க, தே.மு.தி.க தனித்தனியே தீவிர ஆலோசனை! | dmdk alliance speech going on

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:02 (21/02/2019)

தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி - அ.தி.மு.க, தே.மு.தி.க தனித்தனியே தீவிர ஆலோசனை!

அ.தி.மு.க - தே.மு.தி.க ஆகிய இரு கட்சிகள் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் விதமாக தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 

விஜயகாந்த்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. பலம் பொருந்திய அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகளுடனான தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல அ.தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். அ.தி.மு.கவுடன் பா.ம.க 7 தொகுதிகளுடன் கூட்டணியில் உள்ள நிலையில், தே.மு.தி.கவை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அ.தி.மு.க ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க சார்பில் ஒதுக்கப்படும் 5 தொகுதிகளை தே.மு.தி.க ஏற்க தயாராக இல்லை.

எடப்பாடி பழனிசாமி

இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், அடுத்தகட்ட நகர்வு குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேபோல தே.மு.தி.க சார்பில் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து பேசிவருகின்றனர். இரண்டு தரப்பினரின் தீவிர ஆலோசனையைத் தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க., தே.மு.தி.க கட்சியினர் தொகுதி ஒதுக்கீடு குறித்து  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.


[X] Close

[X] Close