அடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள்! - மிரட்டிய கெய்ல் #ENGvWI | Chris Gayle Hits 12 six; lost 8 balls

வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (21/02/2019)

கடைசி தொடர்பு:16:09 (21/02/2019)

அடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள்! - மிரட்டிய கெய்ல் #ENGvWI

கிறிஸ் கெய்ல்

கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் பெற்றவர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி-20 போட்டி எதுவானாலும், அவரது பாணி தனியே. உள்ளூர் தொடர் முதல் சர்வதேசத் தொடர் வரை தனது அதிரடி ஆட்டத்தால் ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மீதான கருத்து மோதல் காரணமாக, இவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில்தான், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு இவர் அழைக்கப்பட்டார். இதற்கிடையில், 2019- உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறப்போவதாக கெய்ல் அறிவித்திருந்தார்.

கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பர்படாஸ் தீவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி  பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெய்ஸ் 135 ரன்களை விளாசினார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 24-வது சதமாகும். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களுக்கு 364 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் 102 ரன்களைக் குவித்து, அந்த அணியை வெற்றிபெறச்செய்தனர்.

கிரிக்கெட்

இந்தப் போட்டியில், கிறிஸ் கெய்ல் 12 சிக்ஸர்களை விளாசினார். முதலில் நிதானமாக விளையாடிய கெய்ல், பின்பு விஸ்வரூபம் எடுத்தார். 120 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரமாண்ட சிக்ஸரை விளாசி, ரசிகர்களுக்கு விருந்து படைந்தார். இதன்மூலம், 3 வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், 488 சிக்ஸர்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.  நேற்றைய போட்டியில் இவர் அடித்த 12 சிக்ஸர்களில், மைதானத்திற்கு வெளியே சென்ற 8 பந்துகளைக் காணவில்லை. அதேபோல, ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை, 3 போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசியுள்ளார். 


[X] Close

[X] Close