`10 இடங்கள் அதிகமில்லை; தமிழர்களின் அன்பு எங்களை ஜெயிக்க வைக்கும்!’ - காங்கிரஸ் கோபண்ணா | Congress DMK Party Effects

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:15 (21/02/2019)

`10 இடங்கள் அதிகமில்லை; தமிழர்களின் அன்பு எங்களை ஜெயிக்க வைக்கும்!’ - காங்கிரஸ் கோபண்ணா

தி.மு.க, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9,  புதுவையில் 1  என மொத்தம் 10 இடங்களை தி.மு.க வழங்கியிருந்தது. இச்செய்தி அதிகாரபூர்வமாக வெளியானபின் சமூக வலைதங்களில் காங்கிரஸுக்கு அதிக இடம் கொடுத்துவிட்டதாக தி.மு.க-வின் மீது விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் இத்தனை சீட்டுக்கு தகுதி இல்லை என இணையவாசிகள் வெளிப்படையாவே விமர்சித்தார்கள். 

கோபண்ணா

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் கேட்டோம். ``எங்களுக்கு தி.மு.க கொடுத்த 10 சீட்டுகள் குறைவானது இல்லை. காங்கிரஸ் கட்சியின்மீது எப்போதும் தமிழக மக்களுக்கு அன்பு இருக்கிறது. அவர்கள், 10 இடங்களிலும் எங்களை வெற்றிபெறவைப்பார்கள் என்பது இன்னும் கொஞ்ச நாள்களில் தெரியவரும். தமிழக மக்களின் அன்பு எங்களை ஜெயிக்கவைக்கும். ஆகவே கவலையில்லை" என்றார்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவர்  சு. திருநாவுக்கரசர் இன்று விஜயகாந்த்தை சந்தித்ததுகுறித்து கேள்வி எழுப்பியபோது, "திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை மட்டுமா சந்தித்தார். டி.டி.வி. தினகரனைச் சந்திக்கிறார். பி.ஜே.பி ஆட்களைச் சந்திக்கிறார்.

விஜயகாந்தைச் சந்தித்த திருநாவுக்கரசர்

அவர் சந்திப்பதன் நோக்கம் என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். நட்பு ரீதியான சந்திப்பாகவும் இருக்கலாம் அல்லது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பாகவும் இருக்கலாம்’’ என்றார். 
 


[X] Close

[X] Close