`மக்களைத் தேடி வந்தது தேர்தலுக்காக அல்ல!’ - மீனவ கிராம மக்களிடையே கமல் உருக்கமான பேச்சு | Kamal's MNM distributes various welfare products to Nagai people

வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (21/02/2019)

கடைசி தொடர்பு:22:09 (21/02/2019)

`மக்களைத் தேடி வந்தது தேர்தலுக்காக அல்ல!’ - மீனவ கிராம மக்களிடையே கமல் உருக்கமான பேச்சு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட  நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளபள்ளம் மீனவ கிராமத்தில், 159 மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு வலைகளை வழங்கினார். 

கமல்ஹாசன்

அப்போது மக்களிடையே பேசிய கமல்ஹாசன், ``புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் கொடுக்க இருந்த நிவாரணப் பொருள்கள் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயல் மனத்திற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நாங்கள் பட்ட கடனைத் தீர்க்கவே நிவாரணப் பொருள்கள் கொடுத்துவருகிறோம். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன,கூரைகள், கட்டடங்கள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. இன்னும் பல கட்டடங்கள் சரி செய்யப்படவில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மய்யம்

நாங்கள் தேர்தலுக்காக வந்தவர்கள் அல்ல; ஆறுதலுக்காக வந்தவர்கள்’’ என்று மீனவர்களிடையே உருக்கமாகக் கூறினார். தான் வர சற்று காலதாமதம் ஆனதால், வெயிலில் காக்கவைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றும் கமல் கேட்டுக்கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ பிரியா, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படங்கள்: பா.பிரசன்னா

 


[X] Close

[X] Close