மன் கி பாத் நிறைவு நிகழ்ச்சி! - தபால் மூலம் மக்கள் கருத்து தெரிவிக்க பா.ஜ.க-வினர் ஏற்பாடு | People express their ideas to PM Modi's Mann Ki Baat through post cards, says Tanjore BJP president

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:07:11 (22/02/2019)

மன் கி பாத் நிறைவு நிகழ்ச்சி! - தபால் மூலம் மக்கள் கருத்து தெரிவிக்க பா.ஜ.க-வினர் ஏற்பாடு

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் நிறைவு நாளான வரும் 24-ம் தேதி, நாடாளுமன்றத் தொகுதிகளில் கடிதம் மூலம் மக்களின் கருத்துகளை கேட்டறிய தஞ்சாவூரில் பா.ஜ.க-வினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பி.ஜே.பியின் தபால் அட்டை

பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் `மன் கி பாத்’ என்ற தலைப்பில் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன. இதற்காக தான் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் மோடி கருத்துக் கேட்பது வழக்கம். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் மன் கி பாத்  நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி இந்த ஆட்சிக் காலத்தில் தனது கடைசி நிகழச்சியாக உரையாற்றுகிறார். அந்த நிகழ்வின்போது, `நாடு, நாட்டின் எதிர்காலம் உங்களுக்காக உழைப்பவரின் கையில்’ என்கிற தலைப்பில் மோடியின் ஆட்சி குறித்த கருத்துகள், யோசனைகள் போன்றவற்றை மக்கள் கடிதம் மூலம் அனுப்பி வைக்க பா.ஜ.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளை எழுதி நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெட்டிகள் வைக்கப்பட உள்ள தபால் பெட்டியில் போடலாம். இவற்றை டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பி.ஜே.பி தஞ்சை மாவட்டச் செயலாளர் இளங்கோவன்

இதுகுறித்து பா.ஜ.க-வின் தஞ்சை மாவட்டத் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பிரதமர் மோடியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றில் நாடு வளர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட தஞ்சாவூர் மாநகராட்சியில் 3 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 2 இரண்டு இடங்களிலும், பேரூராட்சிகளில் 1 இடங்களிலும் என சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தபால் பெட்டி அமைத்து அதன் மூலம் மக்கள் கருத்துகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் எண்ணங்கள் எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகளை ஒரே நாளில் நடத்த எங்கள் தலைமை தயாராகி வருகிறது. அதே நேரத்தில் வரும் மார்ச் 2-ம் தேதி மிகப்பெரிய பைக் பேரணியும் நடைபெறுகிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close