காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை! - இந்திய தேசிய லீக் கோரிக்கை | Ban coal import in Karaikal port, urges Indian national league party

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:07:19 (22/02/2019)

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்குத் தடை! - இந்திய தேசிய லீக் கோரிக்கை

காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதை தடைசெய்யவேண்டுமென்றும் ஆய்வுக் குழுவிடம் இந்திய தேசிய லீக்  புகார் மனு அளித்திருக்கிறது.

coal

காரைக்கால் மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் வாஞ்சூரில் தனியாருக்குச் சொந்தமான மார்க் (Marg ) துறைமுகம் அமைந்திருக்கிறது. இங்கு  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த  நிலக்கரியிலிருந்து துகள்கள் காற்றில் கலந்து மாசுபடுகிறது. இதை அருகே வசிக்கும் மக்கள் சுவாசிக்கும்போது, சுவாசக் கோளாறு, சளி, இருமல், மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் தோல் நோய் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவதாகப் பல்வேறு போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அத்துடன் சாதி, மத பேதமின்றி சர்வ மதத்தினரும் வந்து வழிபடும் உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் மினராக்கள் கரி படிந்து, பொலிவிழந்து காணப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுபற்றி உயர் நீதிமன்றத்திலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், பசுமை தீர்ப்பாய இடைக்கால உத்தரவுப்படி இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர் மதுசூதனன் மற்றும் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் கருணாகரன் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் இன்று நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நாகூர் தர்ஹாவை பார்வையிட வந்த ஆய்வுக்குழுவினரிடம் நிலக்கரி இறக்குமதியால் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்த நாகை மாவட்ட இந்திய தேசிய லீக்கின் மாவட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் நெய்னா, நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

படம்: பா.பிரசன்னா


[X] Close

[X] Close