மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டிய கட்சிகளுக்கு நோட்டீஸ் - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு! | High court issued notice who are showed black flag to modi

வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (22/02/2019)

கடைசி தொடர்பு:07:36 (22/02/2019)

மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டிய கட்சிகளுக்கு நோட்டீஸ் - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க, ம.தி.மு.க உட்பட பல்வேறு கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற கிளை

வழக்கறிஞர் முகமது ரிஸ்வி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``தமிழக மக்களிடம் வேறுபாட்டை உருவாக்கி தேச விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகள் செயல்படுகின்றன. தமிழக மக்களுக்கு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கத் தமிழகம் வந்து செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவது, கறுப்பு பலூன்களை பறக்க விடுவது, தேச ஒற்றுமைக்கு எதிராகக் கோஷமிடுவது, பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதம் ஏற்படுத்துவது, சமூக வலைதளங்களில் பிரதமருக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவது என்று செயல்பட்டு வருகின்றனர். இதில் தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர்கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், தமிழ்புலிகள், மே 17 இயக்கத்தினர் உட்பட பல்வேறு கட்சியினர் உள்ளனர்.

கறுப்புக்கொடி

அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கடமையாற்றும் பிரதமருக்கு எதிராகச் செயல்படும் இந்தக் கட்சிகள், அமைப்புகளைத் தடை செய்தும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாத வகையில் தடை செய்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள கட்சிகள், அமைப்புகளை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close