`அவர்களிடம் ஆத்மார்த்தமான மனநிலை இல்லை' - தி.மு.க கூட்டணியை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்! | The parties in the DMK coalition have no real mood says pon radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (22/02/2019)

கடைசி தொடர்பு:08:45 (22/02/2019)

`அவர்களிடம் ஆத்மார்த்தமான மனநிலை இல்லை' - தி.மு.க கூட்டணியை விமர்சிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

``தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒரு ஆத்மார்த்தமான மனநிலை இல்லை. யாரிடம் இருந்து எதைப் பறித்துக்கொள்வது என்று அங்கு தந்திரங்கள் விளையாடுகிறது. அதனால்தான் அங்கு கூட்டணி இழுபறி நீடிக்கிறது” என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சரவணபெருமாளின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``கூட்டணி பேச்சுவார்த்தையை அ.தி.மு.க.தான் முன்னெடுத்து வருகிறது. அதனால் இதுகுறித்து அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது மட்டும் தெரியும்.” என்றார்.

பொன் ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், ``அ.தி.மு.க., ஊழல் கட்சி என்ற விவாதத்துக்குள் தற்போது போகவேண்டிய அவசியம் இல்லை. இன்றைய பிரச்னைகளுக்கு மத்தியில் எந்த அரசாங்கம் அமைய வேண்டும் என்பதுதான். ஊழல் விஷயத்தைப் பற்றிப் பேசினால் தேவையில்லாத விவாதங்கள் எழும். உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கெல்லாம் சவால் விடும் வகையில் இந்தியா வளர்ந்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் நாடு என்கின்ற அந்தஸ்தைப் பெற வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும். அதற்கு யார் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காகவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டில், உலக அளவில் முன்னெடுத்த திட்டங்களைக் கூறி மக்களைச் சந்திப்போம். கடந்த முறையை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க கூட்டணி அமைப்பதில் இழுபறி அல்ல.. இழு… பறி.. நடக்கிறது ஏனென்றால், அங்குள்ள கட்சிகளிடம் ஒரு ஆத்மார்த்தமான மனநிலை இல்லை. யாரிடம் இருந்து எதை பறித்துக்கொள்வது என்று அங்கு தந்திரங்கள் விளையாடுகிறது. அதனால்தான் அங்கு இழுபறி நீடிக்கிறது.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close