``நாட்டின் நலன் கருதி கேப்டன் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்’’ - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை! | Pon.Radhakrishnan talks about dmdk

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (22/02/2019)

கடைசி தொடர்பு:09:15 (22/02/2019)

``நாட்டின் நலன் கருதி கேப்டன் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்’’ - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

தினம் தினம் கூட்டணிக்காகத் தி.மு.க டெல்லிக்குக் காவடி தூக்கிச் சென்றது. ஆனால், எந்தவித சலனமும் இல்லாமல் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க இணைந்து அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் மெகா கூட்டணி அமைத்துள்ளது என நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தின் நிறைவுப் பணிகளை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுப்பணிகள் நிறைவடைந்த பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அ.தி.மு.க தலைமையிலான தங்கள் கூட்டணியில் நிச்சயம் தே.மு.தி.க சேரும். நாட்டின் நலன் கருதி கேப்டன் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன்

 

கூட்டணிக் கூட்டணி எனக் கூறிக்கொண்டு கடந்த 6 மாதமாகத் தினம் தினம் தி.மு.க டெல்லிக்குக் காவடி தூக்கிச் சென்றது. ஆனால், எந்த வித சலனமும் இல்லாமல் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி மக்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கூட்டணியாக அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றிபெறும்’’ என்றார்.


[X] Close

[X] Close