மேகமலை வனப்பகுதியில் சாலை! – தலைமை வனப் பாதுகாவலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | case filed for make a Road facilities to meghamalai

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (22/02/2019)

மேகமலை வனப்பகுதியில் சாலை! – தலைமை வனப் பாதுகாவலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மேகமலை வனப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேகமலை

தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கும் மேகமலையின் வனப்பகுதிகளில் சாலை அமைப்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், ``மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகளின் வேட்டை மற்றும் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கும், வன விலங்குகளின் கணக்கெடுப்புக்கும் சாலை வசதி இல்லாதது வனத்துறையினருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மேகமலை

வன அலுவலர் கூட்டத்தில் மண் சாலை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, மேகமலை வனப்பகுதிக்குள் சாலை வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை நேற்று (21.2.2019) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர், மேகமலை வன விலங்கு கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


[X] Close

[X] Close