``சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பார்த்து பலமுறை அழுதேன்!’’ - `பேரன்பு’ சாதனா | i cried many time when i saw special childs says sadhana

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (22/02/2019)

கடைசி தொடர்பு:11:35 (22/02/2019)

``சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பார்த்து பலமுறை அழுதேன்!’’ - `பேரன்பு’ சாதனா

சாதனா
 

`பேரன்பு’ படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் சாதனா, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``இயக்குநர் ராம் அங்கிள், மம்முட்டி சார்கிட்ட பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கும்போதே, அவர் இப்படத்தில் நிச்சயம் நடிப்பார்னு நாங்க இருவரும் உறுதியா நம்பினோம். என் அப்பாதான் `பேரன்பு' படத்தின் முழுக் கதையையும் கேட்டார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, ஸ்கூலுக்குப் போற மாதிரி ஷூட்டிங் கிளம்பிட்டேன். படத்தின் இரண்டாம் பகுதியில நடிக்கிறதுதான் எனக்குச் சவாலாக இருந்துச்சு. சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்துலதான் பிற்பகுதி காட்சிகளைப் படம்பிடித்தார்கள். சிறப்புக் குழந்தைகளோடு பழகியதால், அவர்களின் நிஜக் கதைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெரிஞ்சுகிட்டு பலமுறை அழுதேன். அவங்க எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள். ஆனா, அக்குழந்தைகளை நாம சுதந்திரமாவும் சந்தோஷமாகவும் வளர விடணும். ஆனா, பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.

சாதனா

படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் நேரத்தில் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். பிறகு துபாய் வந்துட்டேன். படத்தில் என் நடிப்பு நல்லா இருக்குன்னு பாராட்டிய பலரும், நீதான் நடிச்சியான்னு ஆச்சர்யமா கேட்கிறாங்க. ராம் அங்கிளுக்குத்தான் நன்றி சொல்லணும். `பேரன்பு’ படக்குழுவினர் யாரும் என்னைவிட்டுப் போகப்போறதில்லை. நாங்க தொடர்ந்து நட்பில் இருப்போம். அடுத்த படத்தில் நடிப்பது பற்றி எதுவும் முடிவு செய்யலை. ஆனா, என் அடுத்த படமும் எல்லோரும் பாராட்டக்கூடியதாக நிச்சயம் இருக்கும்’’ எனப் புன்னகைக்கிறார் சாதனா

படங்கள் : ரா.வருண் பிரசாத்


[X] Close

[X] Close