வகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்!- ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம் | Cuddalore Kurinchipadi teacher killed for oneside love

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (22/02/2019)

கடைசி தொடர்பு:12:05 (22/02/2019)

வகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்!- ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்

ஒருதலைக் காதலால் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  குறிஞ்சிப்பாடியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா (23). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

கொலை நடந்த பள்ளி

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர், என்பவர் ஆசிரியர் ரம்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ராஜசேகர் கடந்த சில நாள்கள் முன்பு ரம்யா வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜசேகர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இன்று காலை ரம்யா வழக்கம்போல் பள்ளிக்கு
வந்து வகுப்பறையில் அமர்த்திருந்தபோது, அங்கு வந்த ராஜசேகர் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யா

இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ரம்யாவின் உடலைக் கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ஓடிப்போன ராஜசேகரை தேடி வருகின்றனர். தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் அதிச்சியில் உறைந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


[X] Close

[X] Close