`துளி கூட அரசியல் இல்லை!' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம் | rajini met vijayakanth at his residency

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (22/02/2019)

கடைசி தொடர்பு:12:42 (22/02/2019)

`துளி கூட அரசியல் இல்லை!' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சைப்பெற்று திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். `கேப்டன் ஆரோக்கியமாக உள்ளார்' என்று அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி குறித்து நேற்று தே.மு.தி.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை நேரில் சந்தித்துப்பேசினார். ` நானும் அரசியல் தலைவர், விஜயகாந்தும் ஒரு அரசியல் கட்சித் தலைவர். தேர்தல் நடக்கவுள்ள இந்த நேரத்தில் தமிழக அரசியல், நாட்டு நடப்புகள், தேர்தல் போன்றவை குறித்து நாங்கள் பேசவில்லை என்றால் அது பொய்யா இருக்காது'' என்றவுடன் அனைவரும் சிரித்துவிட்டனர்.

விஜயகாந்த்

மேலும் அவர் கூறுகையில், ``நாங்கள் இருவரும் பொதுவான நாட்டு நடப்பு மற்றும் தேர்தல் குறித்துப் பேசினோம். கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பது விஜயகாந்துக்கு நன்றாகத் தெரியும். அதனால் மக்கள் நலன் கருதி அவர்களுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டுள்ளேன். மற்ற விஷயங்களை இப்போது கூற முடியாது” என்று பேசினார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இன்று சென்றார். சிறிது நேரம் உடல் நலம் குறித்து விசாரித்த பின் வெளியே வந்த ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ரஜினி

அப்போது பேசிய அவர் , `நலம் விசாரிக்க வந்தேன். நான் அமெரிக்காவிலே பார்க்கலாம் என்று நினைத்தேன். முடியல. நான் உடல்நலம் சரியில்லாம ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது பார்க்கவந்தவர் கேப்டன். சிங்கபூரிலிருந்து வந்தபோது விசாரித்த முதல் ஆள் அவர் தான். நல்ல மனிதர். ஆரோக்கியமாக இருக்கிறார். சந்தித்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். துளிகூட அரசியல் இல்லை. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஆக இப்போ சொல்ல ஒண்ணுமில்லை. நன்றி!'' என்றார்.


[X] Close

[X] Close