`மூன்று நாளில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம்!’ - ஜி.கே வாசன் | gk vasan shares about Mp election seat

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (22/02/2019)

கடைசி தொடர்பு:14:20 (22/02/2019)

`மூன்று நாளில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம்!’ - ஜி.கே வாசன்

சிவகங்கை த.மா.கா நகரச் செயலாளர் செல்வரெங்கன் மகள் திருமணம் அங்குள்ள முத்து மகாலில் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பத்திகையாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

ஜி.கே.வாசன்

அப்போது பேசிய அவர் ``நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு மூன்று தினங்களுக்குள் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும். அதேநேரத்தில் சிவகங்கை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, கிடப்பில் போடப்பட்டுள்ள டாமின் கிராபைட் தொழிற்சாலையை மத்திய மாநில அரசுகள் விரைவில் துவங்க வேண்டும்.

மேலும், காரைக்குடியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்- பொருளாதார மேம்பாட்டுக்காக சாலை விரிவாக்கம் செய்யும்போது விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தீவிரவாதம், பயங்கரவாதத்தை எந்த விதத்தில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது. வேறோடு அழிக்க  வேண்டும். இதற்கு எந்த நாடும் ஆதரவளிக்கக் கூடாது. இந்திய அரசு ஐ.நா சபையில் தீவிரவாதத்துக்கு எதிராக கொண்டு வந்த கோரிக்கையை, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டது தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு, மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும்,

எந்தக் கட்சியும் இதுவரை அதிகாரபூர்வமாக கூட்டணியை அறிவிக்கவில்லை. அறிவித்திருப்பது எல்லாமே தற்காலிகமாகத்தான்’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close