முகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு! | Madras Hc order to submit report regarding environmental activist mukilan missing case

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/02/2019)

கடைசி தொடர்பு:16:34 (22/02/2019)

முகிலன் காணாமல் போன வழக்கில் ரயில்வே போலீஸ், போலீஸார் பதிலளிக்க உத்தரவு!

சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத்தரக் கோரி சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளது . 

முகிலன்

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் காணாமல் போனார். 

சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் போராட்டங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருவதால் அவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வந்தது. மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் சார்பில் முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் எழும்பூர் ரயில்வே நிலைய போலீஸார் மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் முகிலன் குறித்து விசாரணையை நடத்தி அந்த  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை வரும் 4-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளனர்.


[X] Close

[X] Close