`திருநாவுக்கரசர் சொன்னதுதான் காரணம்!’ - ரஜினி - விஜயகாந்த் சந்திப்பின் பின்னணி | reason behind Rajni - vijayakanth sudden meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (22/02/2019)

கடைசி தொடர்பு:14:42 (22/02/2019)

`திருநாவுக்கரசர் சொன்னதுதான் காரணம்!’ - ரஜினி - விஜயகாந்த் சந்திப்பின் பின்னணி

தே.மு.தி.க தலைவர்  விஜயகாந்த், பரபரப்பான அரசியல் சூழலில் அமெரிக்காவில் மேற்கொண்டு வந்த சிகிச்சைக்குப் பிறகு சென்ற வாரம் சென்னை திரும்பினார். தற்போதுள்ள உடல்நிலை குறித்து விசாரிக்க நண்பர்களும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அவரைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்,  இன்று காலை  விஜயகாந்தை அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்துப் பேசினார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் பேசிவிட்டுக் கிளம்பினார் ரஜினி. இந்தச் சந்திப்பில் துளியளவும் அரசியல் இல்லை என அவர் அறிவித்திருக்கிறார்.

ரஜினி - விஜய்காந்த்

திடீரென ரஜினி விஜயகாந்தை சந்திக்க என்ன காரணம் என அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தை விஜயகாந்த் வீட்டுப் பக்கம் திருப்பியுள்ளன. இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது ``காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ரஜினியின் நெருங்கிய நண்பர்.

திருநாக்கரசர்

அண்மையில் நடந்த ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு திருநாவுக்கரசர்தான் மூலகாரணமாக இருந்திருக்கிறார். ரஜினியும் திருநாவுக்கரசரும் பேசிக்கொண்டபோது, விஜயகாந்தின் உடல்நிலை குறித்து திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே இந்த சந்திப்பு நேர்ந்ததாகவும் கூறுகின்றனர். 


[X] Close

[X] Close