இளம் வாக்காளர்களுக்கு தூத்துக்குடி கலெக்டரின் நற்செய்தி! | Free sea water games to youths, who first time applying for voter Ids says thoothukudi collector

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (22/02/2019)

இளம் வாக்காளர்களுக்கு தூத்துக்குடி கலெக்டரின் நற்செய்தி!

”புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் 18 வயது முதல் 20 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களுக்கு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நீர்ச்சறுக்கு விளையாட்டு க்கு ஒருமுறை இலவச அனுமதி வழங்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இளம் வாக்காளர்களுக்கு தூத்துக்குடி கலெக்டரின் நற்செய்தி!

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் நாளை 23.2.19 மற்றும் 24.2.19 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் செய்ய, புகைப்படம் மாற்ற என அனைத்தையும் சரிசெய்துகொள்ளலாம். இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத, விடுபட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, வர இருக்கும் தேர்தலில் வாக்களிக்கும்  வகையில் இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், குறிப்பாக 18 வயது நிறைவுபெற்ற, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத புதிய இளம் வாக்காளர்கள், முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், 18 முதல் 20 வயது வரை நிறைவு பெற்ற ஆண், பெண் வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்கும் 18 வயது முதல் 20 வயது வரை  உள்ள இளம் வாக்காளர்களுக்கு,  க்யாக் (படகு குழாம்), ஜெட் ஸ்கை, ஸ்பீடு போட், போட்டிங், ரைட்ஸ் ஆகிய விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஒருமுறை இலவச அனுமதி வழங்கப்படும். எனவே, இளம் வாக்காளர்கள் இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில்  தங்களின் பெயரை சேர்த்து பயன் அடைவதுடன், கடல் சறுக்கு விளையாட்டுகளை விளையாடி மகிழுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்பால், இளம் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close