`அருந்ததி' இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்!  | 'Arunthathi' movie director Kodi Ramakrishna died

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (22/02/2019)

`அருந்ததி' இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்! 

பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா நுரையீரல் கோளாறு காரணமாக இன்று இயற்கை எய்தினார். 1982-முதல் தெலுங்கு சினிமாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் இவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் கோடி ராமகிருஷ்ணா. 

கோட்டி ராமகிருஷ்ணா

தமிழில் ரம்யா கிருஷ்ணன் நடித்த `அம்மன்', அனுஷ்கா ஷெட்டி நடித்த `அருந்ததி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னையினால் ஹைதராபாத்திலுள்ள AIG எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு பக்கவாதத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்த இவருக்கு, இன்று நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், ஹைதராபாத் AIG தனியார் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பலனின்றி இன்று இவர் உயிரிழந்தார். தெலுங்கு சினிமாவில் இவர் ஆற்றிய பங்கினை கௌரவிக்கும் வகையில் 2012- ம் ஆண்டு 'ரகுபதி வெங்கய்யா விருது' இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   


[X] Close

[X] Close