'போலீஸ் நடவடிக்கை எடுக்கல!' - தேனி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண் | Woman attempted suicide in theni collector office premises

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:55 (22/02/2019)

'போலீஸ் நடவடிக்கை எடுக்கல!' - தேனி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்

கடந்த வாரம் முதியவர் ஒருவர், தனது உடல்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சூழலில், இன்று காலை, பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி முத்துமாரி (34). மூன்று வருடங்களுக்கு முன் தனது கணவன் முருகனை இழந்த முத்துமாரி, மாமியாருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாகக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், தொடர் குடும்பப் பிரச்னை காரணமாக கலெக்டரிடம் புகார் தெரிவிப்பதற்காகத் தனது மகளுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்த முத்துமாரி, புகார் மனுவுடன் காத்திருந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற பெண்

அப்போது, திடீரென தான் கொண்டுவந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், முத்துமாரியை மீட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி சம்பவ இடத்திற்கு வந்தார். காவல் துறையினர் உதவியுடன் முத்துமாரியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக முத்துமாரியின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


[X] Close

[X] Close