`ஹூ இஸ் உதயநிதி?’ - திகில் கேள்வி கேட்ட முகுல் வாஸ்னிக்! | who is udhayanidhi asks congress mukul wasnik

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:33 (22/02/2019)

`ஹூ இஸ் உதயநிதி?’ - திகில் கேள்வி கேட்ட முகுல் வாஸ்னிக்!

கூட்டணி உடன்படிக்கைக்காக அறிவாலயம் வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியை யார் என்று கேட்டது தி.மு.க.வினர் மத்தியில் `ஹாட் டாபிக்'காக மாறியிருக்கிறது.

முகுல் வாஸ்னிக்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், கே.கே.வேணுகோபால் ஆகியோர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி அறிவாலயம் வந்தனர்

அறிவாலயத்துக்குள் நுழைந்தவுடன், `வேர் இஸ் கனிமொழி?' என்று முகுல் வாஸ்னிக் கேட்க, `டெல்லி டீல்' என்று ஒற்றை வார்த்தையில் மு.க.ஸ்டாலின் முடித்துள்ளார். `அவர் இருந்தால் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் சரியாக இருக்கும்' என்று முகுல் வாஸ்னிக் மீண்டும் அழுத்தம் கொடுக்க, கனிமொழி டெல்லியில் இருப்பதால் வர இயலாததை தி.மு.க. தரப்பில் விளக்கியுள்ளனர். இதற்குப் பிறகு நடந்ததுதான் காமெடி.

முகுல் வாஸ்னிக் உதயநிதி

ஸ்டாலின் அருகில் நின்றிருந்த உதயநிதியைக் காண்பித்து, `ஹி இஸ் உதயநிதி’ என்று தி.மு.க. தலைவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு, `ஹூ இஸ் உதயநிதி’ என்று புரியாமல் முகுல் வாஸ்னிக் ஜெர்க் ஆகியுள்ளார். அதிர்ச்சியான தி.மு.க. பெருந்தலைகள், `அட, எங்க தலைவர் பையன்ங்க!’ என்று விளக்கியுள்ளனர். குறும்பான கட்சி நிர்வாகிகள் சிலர், ``இதுக்காக தலைவர் பையனை இந்திப் படத்துலயா நடிக்க வைக்க முடியும்?’’ என்று ரகசியமாக முணுமுணுத்துக் கொண்டு சிரிக்கின்றனர். 


[X] Close

[X] Close