பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்! - கலெக்டர் நேரில் ஆய்வு | Theni collector inspects Pallavarayyapatti jallikattu arrangements

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:21:00 (22/02/2019)

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்! - கலெக்டர் நேரில் ஆய்வு

பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் பிரபலமான பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (24/02/2019) நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் இன்று ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.

வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், காளைகள் பரிசோதனை மேற்கொள்ளும் இடம், காளைகள் நிறுத்துவதற்கான இடம், காளை உரிமையாளர்கள் காளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அமைக்கப்பட்டுள்ள இடங்கள், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர், கழிப்பறை, போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை சரியாக இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.தென்னரசு, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.எம்.சரஸ்வதி, கால்நடைப் பராமரிப்பு இணை இயக்குநர் பி.ராமர், உத்தமபாளையம் வட்டாட்சியர் ப.உதயராணி உட்படப் பலர் உடனிருந்தனர். பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு தேனி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close