`கழிப்பறையை சுத்தப்படுத்தணும் பிச்சை போடுங்கள்!’ - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம் | Tamizhaga vazhvurimai katchi staged protest in pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

கடைசி தொடர்பு:06:00 (23/02/2019)

`கழிப்பறையை சுத்தப்படுத்தணும் பிச்சை போடுங்கள்!’ - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன போராட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரமில்லாமல், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளை சுத்தப் படுத்தாதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பேருந்து நிலைய பணிகளிடம் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக நகராட்சி சார்பில் ஆங்காங்கே இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில், சில கழிப்பறைகள் ஒப்பந்தக்காரர்களிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. இலவச கழிப்பிடம் மட்டுமில்லாது, கட்டணக் கழிப்பிடமும் முறையாகச் சுத்தப்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டை நிர்வாகிகள்  பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்து பயணிகளிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில், ஈடுபட்டனர். இதனால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம், ``நூற்றாண்டுகள் கடந்தாலும், புதுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு விடிவு காலம் பிறப்பதில்லை. பேருந்து நிலையத்தில் ஆரம்பத்தில் இருந்தே முறையான கழிப்பறை வசதி இல்லை. குறிப்பாக, பெண்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததால், அனைத்து தரப்பினரும் முகம் சுழித்தபடி செல்லும் நிலைதான் தினமும் உள்ளது. எனவே, அனைத்து கழிப்பறைகளையும் சீரமைத்து, தினமும் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.


[X] Close

[X] Close