`கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்!’ - சமூக அங்கீகாரம் கொடுத்த சிறைத்துறை | Petrol bunk opened by Prisoners in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:16 (23/02/2019)

`கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்!’ - சமூக அங்கீகாரம் கொடுத்த சிறைத்துறை

வேலூர் மத்திய சிறை எதிரே கைதிகளைக் கொண்டு நடத்தக்கூடிய பெட்ரோல் பங்க்கை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்துவைத்தார்.

கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்

சிறை வாழ்க்கையில் உள்ள கைதிகள், மதிப்புமிக்க சமுதாய வாழ்வில் அடியெடுத்து வைக்கவும், சமூக மறு ஒருங்கிணைப்புக்கான முன் முயற்சியாகவும், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில்  நிறுவனம் இணைந்து, வேலூர் மத்திய சிறை எதிரே கைதிகள் நடத்தக்கூடிய பெட்ரோல் பங்க்கை அமைத்தது. இதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 22-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்துவைத்தார். இந்த பெட்ரோல் பங்க்கில் 15 நன்னடத்தை கைதிகளுடன் 11 சிறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும். ஒரு சிறைவாசிக்கு நாளொன்றுக்கு ஊக்கத்தொகையாக 100 ரூபாய் வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் நிகழ்ச்சி

பங்க்கில், போதுமான எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. லூப்ரிகன்ட்ஸ் சேகரிக்க இடவசதி, அதிநவீன எலெக்ட்ரானிக் டிஸ்பென்ஸிங் யூனிட்டுகள், சுற்றுச்சுவர், வாகனம் செல்லும் பாதை, அடையாள காட்சிப் பலகை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி கழிவறைகள், குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா போன்றவற்றை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும் டிஜிட்டல் பேமன்ட் வசதிகள், பாதுகாப்பு சாதனங்கள் போன்ற வசதிகளும் கொண்டுவரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close