`இதை நம்பி தான் பிழைப்பு நடத்துகிறார்கள்' - திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடிபுகுந்த தொழிலாளர்கள்! | Cow truck workers Protest in Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:31 (23/02/2019)

`இதை நம்பி தான் பிழைப்பு நடத்துகிறார்கள்' - திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடிபுகுந்த தொழிலாளர்கள்!

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் குடிபுகும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

போராட்டம்

திருச்சி சுப்புரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள், மாட்டுவண்டித் தொழிலாளர்கள் நேற்று திரண்டு வந்தனர். சட்டென யாரும் எதிர்பார்க்காத நிலையில், உள்ளே உட்கார்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கடந்த டிசம்பர் மாதம் இதேபோல் போராடிய மாட்டுவண்டி தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையின்படி கொள்ளிடம் ஆறுகளில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கான குவாரி துவங்கப்பட்டது. அந்தக் குவாரியை தற்போது அரசு அதிகாரிகள் மூடிவிட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.  

திருச்சி மாநகர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. நம்மிடம் பேசிய ராஜா, ``கொள்ளிடம் ஆற்றில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவ பெருமாள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி, லால்குடி வட்டம் அரியூர், அப்பாதுரை, கீழ முள்ளைக்குடி, முருங்கப்பேட்டை, கொண்டையம்பேட்டை பகுதிகளில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள ரீச் திறக்கப்பட்டது. 

ராமர்

அந்தக் குவாரிகளில் மாட்டுவண்டி மூலம் மணல் இயற்கையான முறையில் எந்த விதிகளும் மீறாமல் மணல் அள்ளி வந்தார்கள். இதை நம்பி பல்வேறு கிராம மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். மேலும், அப்படி அள்ளும் மணலை திருச்சியில் உள்ள சாதாரண ஏழை மக்கள் வாங்கி கட்டுமான தொழிலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அந்தக் குவாரிகளை அதிகாரிகள் திடீரென மூடியதால் பல்லாயிரக்கணக்கான மாட்டுவண்டித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தபடி மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளும் குவாரியை திடீரென மூடியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்தக் குவாரிகளை இயக்கி இதையே நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இல்லையெனில் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம்” என்றார்.

போராட்டம்

போராட்டம் தொடர்ந்த நிலையில், அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அடுத்த சர்க்கார்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளும் தகவல் கிடைக்கவே, திருவெறும்பூர்  ஏ.எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்ரே போலீஸாரை அழைத்துக்கொண்டு ஸ்பாட் விசிட் அடித்தார். அப்போது ஏ.எஸ்.பியைக் கண்டதும் மணல் திருடர்கள் மாடுகளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடினர்.  அதையடுத்து, 4 மாட்டு வண்டிகள் மற்றும் 4 மாடுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் போராட்டத்தாலும், போலீஸாரின் அதிரடியாலும் திருச்சியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close