`அதிதிமேனன் மன்னிப்புக் கேட்காவிடில் மானநஷ்ட வழக்கு!' - எச்சரிக்கும் வழக்கறிஞர் | Adhiti Menon should be ask sorry for her speech says lawyer

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:39 (23/02/2019)

`அதிதிமேனன் மன்னிப்புக் கேட்காவிடில் மானநஷ்ட வழக்கு!' - எச்சரிக்கும் வழக்கறிஞர்

ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் பணம் பெற்றதாக நடிகை அதிதிமேனன் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால்  மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என  ஷோபனாராஜன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு

`பட்டதாரி' படத்தின் ஹீரோயின் அதிதி மேனன் கடந்த 18-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார். மேலும், பல பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தார் அதற்கு அபிசரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் வழக்கறிஞர் ஷோபனாராஜன் மற்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிலரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ``நடிகை அதிதிமேனன் ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் பெற்றதாகவும், அந்தப் பணத்தில்தான் நடிகர் அபி சரவணன் வீடு வாங்கியதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அவமதிக்கும் செயலாகும், ஜல்லிக்கட்டுப் போராட்டம் பணத்துக்காக நடந்ததில்லை அது தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டம். தமுக்கம் ஜல்லிக்கட்டுப் போராட்டக்குழு பணம் பெற்றது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, மன்னிப்பு  கேட்காவிட்டால் நாங்கள் நடிகை அதிதிமேனன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வோம். இருவருக்கும் திருமணம் ஆன ஆவணங்கள் போலி என்று கூறியுள்ளார். அவதூறு பரப்பும் வகையில் பேசியது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்பதால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக'' தெரிவித்தனர்.


[X] Close

[X] Close