`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்! | rajini surprised vijayakanth's son vijaya prabhakaran political speech

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (23/02/2019)

கடைசி தொடர்பு:10:55 (23/02/2019)

`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்!

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் அரசியல் பேச்சுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ரஜினி - விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். இந்த நிலையில் சென்னை திரும்பிய அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்படி விசாரித்தவர்களில் முக்கியமானவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும். 

விஜயகாந்த் குடும்பத்தினர்

இவர்கள் இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அரசியல் இருந்ததாகக் கூறப்பட்டாலும்,  ``ஒரு துளிகூட சந்திப்பில் அரசியல் இல்லை" என இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதற்கிடையே விஜயகாந்தை ரஜினிகாந்த் சந்தித்தபோது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவரின் அரசியல் பேச்சுகள் குறித்து சந்திப்பின்போது ரஜினி பேசியுள்ளார். 

விஜய பிரபாகரன்

ரஜினி விஜயகாந்த் குடும்பத்துடன் பேசும் புகைப்படத்துடன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேடட்ஸாக பதிவிட்டுள்ளார். அதில், ``நான் அரசியல் மேடைகளில் பேசியதைப் பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் சிறப்பான ஒன்று. மேடைகளில் நான் பேசிய விதம் குறித்து சொல்லி ஆச்சர்யப்பட்டார். அது குறித்து சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார். கண்டிப்பாக அங்கிள் இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்" எனக் கூறியுள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விஜய பிரபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close