``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்! | Director Gowthaman starts new political party

வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (23/02/2019)

கடைசி தொடர்பு:11:13 (23/02/2019)

``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்!

``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்

தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கணக்குகள் குறித்தும், பிரசாரத்துக்கான வியூகங்கள் தீட்டுவதும் என பரபரப்பாக இருக்கிறார்கள். இத்தகையச் சூழலில் இயக்குநரும் சமூக ஆர்வலருமான வ.கவுதமன் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக செய்தி வரவே, அவரிடம் பேசினோம், கட்சி துவங்க வேண்டிய அவசியமும் அவசரமும் தற்போது ஏன் எழுந்தது என்கிற கேள்விக்குப் பேசத் துவங்கினார். ``என்னுடைய கருத்தைக் கொண்ட சிலர் அரசியலில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செயலில் இறங்கத் தயங்குகிறார்கள். இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்க நாங்கள் தயாராக இல்லை. ஆகவே, நம் மக்களுக்கான அரசியலைப் பேச நாங்களே கட்சித் தொடங்குவதென தீர்மானித்து விட்டோம். 

கவுதமன்

ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் மொழியும், தமிழர்களின் கலாசாரமும் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இனியும் அழிவு ஏற்படாமல் அரணாக நிற்போம். இதுவரை இழந்ததை மீட்போம். நான் கட்சி ஆரம்பிக்கிறேன் எனச் சொன்னதும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட 'எந்த உதவியானாலும் கேளுங்கள். செய்கிறோம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். நாளை கட்சியின் பெயர், கொடி, கொள்கை அறிவிப்புகள் போன்றவை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். எங்கள் கட்சியின் உதயம் ஒரு மிகப்பெரிய ஜனநாயக யுத்தத்தின் துவக்கமாக இருக்கப் போகிறது என்பதைப் போகப் போக எல்லோரும் உணர்வார்கள்" என்றார். 


[X] Close

[X] Close