`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா?' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி | kanimozhi responds angry young man questions in kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (23/02/2019)

கடைசி தொடர்பு:12:31 (23/02/2019)

`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா?' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி

தனக்கு எதிராகக் கேள்வி கேட்ட இளைஞரைச் சாமர்த்தியமாக கனிமொழி சமாளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கனிமொழி

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இமாம் மணியாச்சி ஊராட்சி, திட்டங்குளம் ஊராட்சி, நாலாட்டின்புதூர் ஊராட்சி, வில்லிசேரி ஊராட்சி, முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது தனக்கு எதிராகக் கேள்வி கேட்ட இளைஞரைச் சாமர்த்தியமாக கனிமொழி சமாளித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திட்டங்குளம் ஊராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டபோது இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுக் கூட்டத்தைத் தொடங்கினார். 

கனிமொழி

அப்போது அங்கிருந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞர் தி.மு.க.வைச் சேர்ந்த யார் வந்தாலும் இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்ததில்லை. நீங்கள் அணிவித்திருக்கிறீர்கள் அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், அதே சமூகத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்ற பி.ஹெச்டி படித்த இளைஞர் கனிமொழியை நோக்கி ``உங்கள் அண்ணன் மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதாகச் சொல்லி ஒரு சாதிச் சண்டையை உருவாக்கப் பார்க்கிறார்" என்று கோபமாக கேட்டார். அதற்குக் கனிமொழி அமைதியாக ``எந்தக் கோரிக்கையும் தளபதியிடம் வைக்கப்படும்போது, பரிசீலிக்கப்படும் என்று சொல்லுவது இறுதியானது அல்ல. 

இதுபோன்ற கோரிக்கைகள் மீது உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது என்று படித்த உங்களுக்குத் தெரியாதா" என்று அவரையே மடக்கி இந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கூட்டம் முடிந்த பிறகு கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் கனிமொழியிடம் வந்து, ``இப்படி இவர்கள் கேட்டதற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அதற்குப் பதிலளித்த கனிமொழி, 'மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து நாம் அவர்களுக்குப் புரியவைத்துவிட்டால் போதும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அதற்காக நீங்கள் எதுவும் வருத்தப்படாதீர்கள்" என்று கூறினார். கூட்டத்தை முடித்துவிட்டுச் சென்ற கட்சிக்காரர்கள் கலைஞரிடம் இருந்த புத்திக் கூர்மையும் பதில் சொல்லும் திறமையும் இவரிடத்தில் காண முடிகிறது என்று கூறி சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close