குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிரம்! - கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது | Four arrested under goondas act

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (23/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (23/02/2019)

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிரம்! - கடலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது

கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி இரவு முன் விரோதம் காரணமாக ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த சுபாஷ் (32), ஸ்ரீதர் (23), சத்தியமூர்த்தி (24), பிரபாகரன் (25) உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதில் ஸ்ரீதர், சத்தியமூர்த்தி, பிரபாகரன் ஆகியோரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர்  மாவட்ட எஸ்.பி. சரவணன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் இவர்களை ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

 

குண்டாஸ்

 

இந்த வழக்கில் முதல் எதிரி சுபாஷ் கடந்த 20 தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதேபோல் நெய்வேலி அருகே ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் இவரின் நண்பர்கள் வடக்கு மேலூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி, பிரபுராஜ், வேல்குமார் ஆகியோர் கடந்த ஜனவரி 2-ம் தேதி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இதில் விஜய்யின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட எஸ்.பி. சரவணன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் இவரைக் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க  உத்தரவிட்டார்.


[X] Close

[X] Close