`முகிலன் விவகாரத்தில் அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது!' - திருமுருகன் காந்தி | Thirumurugan gandhi urges government to take action in Activist Mukilan missing case

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (23/02/2019)

`முகிலன் விவகாரத்தில் அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது!' - திருமுருகன் காந்தி

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போன விவகாரத்தில் அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
 
திருமுருகன் காந்தி
 
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன், வழக்கறிஞர் கென்னடி உள்ளிட்டோர்  இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்,  ``சூழலிலியல் போராளி முகிலன், கடந்த 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட்டவர், அன்று இரவு  சென்னையில் இருந்து ரயிலில் கிளம்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் காணவில்லை. கடந்த ஒருவரத்துக்கும் மேலாக அவர் காணவில்லை என்றும், அவர் குறித்து சமூக உணர்வாளர்கள் எழுப்பி வருகின்றார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்க்கிறது. 
 
சூழலியல் போராளி முகிலன், நியூட்ரினோ, கூடங்குளம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் பக்கம் நின்று அரசுக்கு எதிராக போராடியவர். காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அவர் எடுத்த முன்னெடுப்புகள் ஏராளம். வெளிப்படையாக அரசும், ஆட்சியாளர்களும் அவரை முடக்க துடித்தார்கள். சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைத்து சித்தரவதைச் செய்தார்கள். 
திருமுருகன் காந்தி
 
ஆனாலும், அவர் மக்களுக்கான போராட்டத்தில் பின்வாங்காமல் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட சதி என்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம், எதை வேண்டுமானாலும் செய்யக் கூடும். மேலும் அரசும், காவல்துறையும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மோசமாக நடந்ததை சுட்டிக் காட்டியதால் தமிழகக் காவல்துறை, முகிலன் காணாமல்போன விவகாரத்தில் வேடிக்கைப் பார்க்கிறது. 
 
முகிலன் தனது நண்பர்களிடம் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்பிறகு ரயிலில் மதுரைக்கு கிளம்பியவர், எங்குச் சென்றார் எனத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை 4ம்தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும், ஆளும் கட்சியினரும் இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், எங்கு இருக்கிறார் என்பதுகுறித்து தமிழக அரசு மௌனம் சாதிக்கிறது. இது, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் நிலைமை என்ன என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’’ என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close