2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்படவில்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர் | HIV case: Health Minister Vijaya Baskar rules out the allegations

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (23/02/2019)

2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்படவில்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக வந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

 கோவை அரசு மருத்துவக் கல்லூரியின்  நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அகநாள ஆய்வுக்கூட  திறப்பு விழாவிற்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் வருகைபுரிந்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கடந்த  மூன்று ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவமனை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து உள்ளது. சர்வதேச தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் அதிநவீன சிகிச்சை பிரிவு இன்று துவங்கப்பட்டு உள்ளது. மூளையில் ஏற்படும் நரம்பியல்  பிரச்சனைகளை சரி செய்ய  தனியார் மருத்துவமனையில் 7 முதல் 8 லட்ச ரூபாய் செலவு ஆகும். அத்தகைய  சிகிச்சை அளிக்கும் பிரிவு  இந்த அரசு மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

2வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

கோவை அரசு மருத்துவமனையில் 2வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்த  குற்றச்சாட்டில் உண்மை இல்லை. குழந்தைக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தையும் அந்த ரத்தத்தை தானம் கொடுத்த நபரையும்மீண்டும் சோதனை செய்துவிட்டோம். அவருக்கும் ஹெ.ச்.ஐ.வி பாதிப்பு இல்லை.ஆகையால் கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தினால் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படவில்லை. அந்தக் குழந்தைக்கு அனைத்து வகையான உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கேயே குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளித்தால் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close