`ட்ரம்ப் கட்சியை ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யமில்லை!’ - அமைச்சர் ஜெயக்குமார் | DMK Leader MKStalin Under Pressure says Minister Jayakumar

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (23/02/2019)

கடைசி தொடர்பு:19:32 (23/02/2019)

`ட்ரம்ப் கட்சியை ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யமில்லை!’ - அமைச்சர் ஜெயக்குமார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்சியுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின்  கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என அமைச்சர்  ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

ஜெயக்குமார்

சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``தே.மு.தி.க-வுடனான கூட்டணியில் எந்த இழுபறியும் கிடையாது. முடிய வேண்டிய நேரத்தில் முடியும். உங்களுக்கும் அதிகாரபூர்வ தகவல் விரைவில் தெரிவிக்கப்படும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்து உள்ளது. மக்கள் நலம் கூட்டணியாக இது உருவெடுத்துள்ளது. நாடும் நமதே நாற்பதும் நமதே என்பதே எங்கள் கோஷம். கடந்த தேர்தலில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை வெற்றிக்கூட்டணி அந்த வெற்றிக்கனியை பறிக்கும். ஸ்டாலின் பயத்தின் உச்சத்தில் இருக்கிறார். அதனால் தான் அவரது வார்த்தைகள் குழறுகிறது; ஒரு தெளிவு என்பதே இல்லை. இதுதான் தி.மு.க-வின் நிலை. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துவிட்டு இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை என ஸ்டாலின் பேசுகிறார். ஆச்சரியப்படுவதற்கு இல்லை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து அவரது கட்சியை கூட ஸ்டாலின் கூட்டணிக்கு அழைக்கலாம். 

அதிமுக ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டோம். இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது. மற்ற கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்குப் போகக்கூடாது என்பதற்காக எல்லா முயற்சிகளையும் ஸ்டாலின் எடுத்து வருகிறார். அது எடுபடப்போவதில்லை.என்றார்.


[X] Close

[X] Close