`15 ஆண்டுகளில் மனித உறுப்புகள் கடைகளில் விற்கப்படும்!' - வைரமுத்து | after 15 years human body parts will be selling in shops says vairamuthu

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:08:30 (24/02/2019)

`15 ஆண்டுகளில் மனித உறுப்புகள் கடைகளில் விற்கப்படும்!' - வைரமுத்து

தஞ்சாவூரில் நடைப்பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கவிபேரரசு வைரமுத்து இன்னும் 15 ஆண்டுகளில் மனித உறுப்புகள் கடைகளில் கிடைக்கும். இதயம், கிட்னி போன்ற உறுப்புகளுக்கு தனி கடைகள் உருவாகும். பிறக்கும் குழந்தைக்கு ஜிப் வைக்கப்படும் இவை நோய்களை தெரியபடுத்தும் சரிபடுத்தவும் செய்யும் இது நிச்சயம் நடக்கும் என பேசினார்.

வைரமுத்து

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் வீரமணி தலைமையில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.மாலை பேரணி மற்றும் பெரியார், மணியம்மையார் பெருமைகள் சொல்லும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் நடைப்பெற்ற மாநாட்டின் முதல் நாள் நிறைவு அரங்கத்தில் கி.வீரமணி, வைகோ, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வைரமுத்து பேசுகையில், ``சினம் நிறைய கூடியிருக்கிற பகுத்தறிவு சிங்கங்களே! எனக்கு பயனாடை போத்தி வாழ்த்தினார் தலைவர் வீரமணி .நிர்வாணமாய் கிடந்த தமிழ் இனத்திற்கே பயனாடை கொடுத்தவர் பெரியார். மானத்தை ஆடையாக அணிய செய்தவர் பெரியார்.

வீரமணி

64 வயதில் எனக்கு இந்த மேடை ஏறுவதற்கு வாய்பளித்த வீரமணிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற கூட்டங்களில் வரிசையில் உட்கார்ந்து கற்று, பெற்றே இந்த மேடை ஏறியிருக்கிறேன். பெரியாருக்கு நூற்றாண்டு விழா நடத்திய வீரமணி மணியம்மையாருக்கும் நூற்றாண்டு விழாவை நடத்துகிறார், இதற்கு காலம் அவருக்கு வாய்ப்பு தந்தது. தலைவர் வீரமணிக்கு நாங்கள் நூற்றாண்டு விழாவை நடத்துவோம். இதில் நான், ஸ்டாலின், வைகோ என அனைவரும் இருப்போம். ஒரு மொழிக்கு பெருமை தொன்மை இல்லை தொடர்ச்சி தான் பெருமை.  அது போல ஒரு இயக்கத்திற்கும் தொடர்ச்சி தான் பெருமை.பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் பட்டு போய் விடும் என கனவு கண்டார்கள் பலர்.

வைகோ

ஆனால் மணியம்மை அவருக்கு பிறகு வீரமணி என இந்த இயக்கம் தொடர்கிறது. நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும். விஞ்ஞான யுகத்தில் 100 ஆண்டுகள் வாழ்வது பெரிதல்ல. நீங்கள் 15 வருடங்கள் உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு கவலையில்லை.இதயம், கிட்னி போன்ற உறுப்புகள் கடைகளில் கிடைக்கும். இதயம், கிட்னி போன்ற மனித உறுப்புகளுக்காக கடைகள் திறக்கப்படும். இது நிச்சயமாக நடக்கும். குழந்தை பிறக்கும் போதே உடலில் ஒரு ஜிப்பை பொருத்தி விடுவார்கள். அவை இதய துடிப்பு குறைந்தாலே தானாகவே சரி செய்து கொண்டு விடும். சர்க்கரையின் அளவு கூடினாலோ, அல்லது வேறு எதாவது நோய் என்றாலோ காண்பித்து விடும் பிறகு சிகிச்சை எடுத்து கொள்ளலாம் இவை நடக்கும்.

வீரமணி

வீரமணி அவர்கள் விரும்பும் வரை வாழலாம். பெரியார் மணியம்மையாரின் திருமணம் பற்றி விமர்சனம் எழுந்தது. திருமணம் என்பது வயதோடும், உடலோடும், சட்டத்தோடும் சம்பந்தபட்டது இல்லை. ஆண் பெண் இருவர் சம்மந்தப்பட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்திய துணை கண்டத்தில் பழைய நாகரீகத்தை தூக்கியெறிந்து ஒரு புதிய திருமண உறவு முறையை கற்பித்த தம்பதிகள் இவர்கள் என உறுதியாக அருதியிட்டு கூறுகிறேன். இது குறித்து தனிபட்ட முறையிலோ, மேடையிலோயார் வாதிட வந்தாலும் வரலாம், நான் தயாராக இருக்கிறேன். பெரியாரின் குணங்கள்  மணியம்மையாருக்கு இடம் பெயர்க்கப்பட்டது. அவை தற்போது வீரமணியிடம் உள்ளது. பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லி கொடுங்கள். தமிழில் பேசுங்கள் நாளை நம் அரசு அமைகிறது'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close