கனிமொழிக்கு எதிராக களம் காண்கிறாரா தமிழிசை? - அமித்ஷா சொன்ன யோசனை! | kanimozhi and Tamilisai Soundararajan may contest in same constituency

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (24/02/2019)

கடைசி தொடர்பு:12:57 (24/02/2019)

கனிமொழிக்கு எதிராக களம் காண்கிறாரா தமிழிசை? - அமித்ஷா சொன்ன யோசனை!

தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுவார் என பா.ஜ.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதேபோல தி.மு.க அணியில் காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளன. பலம் பொருந்திய இரண்டு மாநிலக்கட்சிகளும் தாங்கள் ஒதுக்கியுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே அறிவித்துள்ளன. தவிர, எந்த தொகுதிகள் யாருக்கு என்பன உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தி.மு.கவைப்பொறுத்தவரை கனிமொழி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கிராமசபைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று களப்பணியாற்றி வருகிறார். மக்களை சந்தித்து பேசிவருகிறார். தி.மு.க வட்டாரத்தில் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.  எதிர் அணியான அ.தி.மு.க, பி.ஜே.பி. கூட்டணி சார்பில், அதே தொகுதியில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசையை நிற்கச் சொல்லியிருக்கிறாராம் கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா. சில நாட்களுக்கு முன்பு, அவர் மதுரை வந்தபோது, தமிழிசையிடம் இந்த யோசனையை சொன்னாராம். ஆனால், முடிவெடுப்பது தமிழிசை கையில்தான் இருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.கவினர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என  கூறப்பபடுகிறது.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close