தேர்தல் பணிக்கு ஆசிரியர்களே வேண்டாம் - அ.தி.மு.க. கறார்! | Teachers do not need to hire for election work admk Urges

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (24/02/2019)

தேர்தல் பணிக்கு ஆசிரியர்களே வேண்டாம் - அ.தி.மு.க. கறார்!

 

தேர்தல் பணி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட துணை சபாநாயகரும், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசிய பேச்சுதான் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. சமீபத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, ஆசிரியர் சங்கத்தினர் பெருந்திரளாக பங்குபெற்றனர். அ.தி.மு.கவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. போராட்டத்தில் பங்குபெற்ற 28 கல்லூரி ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக வெவ்வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளனர். இதனால், அரசு ஊழியர்களில், குறிப்பாக ஆசிரியர்கள் மனக்குமுறலில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை வைத்து தேர்தலை நடத்தினால்,  அ.தி.மு.க. மீது எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் ஒட்டுப்பதிவு பூத்தில் பணியில் ஆசிரியர்கள் முழுவதுமாக இருந்தால், சர்ச்சைகள் எழும்போது, அ.தி.மு.க-வுக்கு எதிராக செயல்படவும் வாய்ப்பு இருப்பதாகவே உளவுத்துறை ஆளுங்கட்சி மேலிடத்துக்கு எச்சரித்துள்ளதாம்.

தேர்தல் ஆணையம்

இதையெல்லாம் அறிந்த, முதல்வர் எடப்பாடி, பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்து பேசியிருக்கிறார். தமிழக தேர்தல் அதிகாரி நடத்தும் கூட்டத்தில் என்ன பேசவேண்டும்? என்பதை தெளிவாக சொன்னாராம். அதை அப்படியே, பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டத்தில் பேசினார். அவர் பேசிய பேச்சின் சாரம்சம் இதுதான்... 'முழு நேர பணியில் இருக்கும் ஆசிரியர்களை தேர்தல் வாக்கு பதிவு ஆகும் பூத்துகளில் முக்கிய பணிகளில் நியமித்து வருகிறீர்கள். ஆனால், கிராமப்புறங்களில் தங்கி பணியாற்றும் வேறு சில அரசு துறைகளில் இருக்கும் பணியார்களும் இருக்கிறார்களே?... இவர்களை ஆசிரியர்களுக்கு பதிலாக வாக்குசாவடிகளின் முக்கிய பணிகளில் பயன்படுத்தலாமே?'. இதைக்கேள்விப்பட்ட ஆசிரியர் சங்கத்தினர் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்கள். இதுகுறித்து, பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டபோது, "அன்றைய கூட்டத்தில் தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்றேன். காரணம்.. வறட்சி வரலாம். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதையெல்லாம் சமாளிக்க அரசு ஊழியர்கள் தயராக இருக்கவேண்டும். இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தினால், அவர்களது ரெகுலர் பணி பாதிக்கப்படும். அதனால்தான், ஒரே கட்டமாக நடத்தச் சொன்னேன். அதேபோல், முழுநேர பணியில் இருக்கிற ஆசிரியர்களை விட, மற்றவர்களை பயன்படுத்தலாமே? என்று கருத்து சொன்னேன். கிராமத்தில் தங்கி பணி செய்யும் சத்துணவு, அங்கன்வாடி...பணியாளர்கள் இருக்கிறார்கள். பஞ்சாயத்துக்கள், கூட்டுறவுதுறையில் பணியாற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தேர்தல் நேரத்தில் உதவி பணிகளில்தான் பயன்படுத்துகிறார்கள். வாக்குசாவடிகளில் முக்கிய பணிகளில் ஆசிரியர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது ஏன்?.. மற்ற பணியாளர்களையும் முக்கிய பணிகளில் பயன்படுத்தலாமே? என்றுதான் சொன்னேன். வேறு எந்த உள் நோக்கமும் இல்லை " என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close