அமெரிக்காவில் சிகிச்சை முடித்து திரும்பிய விஜயகாந்த் - திருச்சியில் பால்குடம் எடுத்த தே.மு.தி.க தொண்டர்கள் | Dmdk party members are prayed for Vijayakanth health at trichy

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (24/02/2019)

அமெரிக்காவில் சிகிச்சை முடித்து திரும்பிய விஜயகாந்த் - திருச்சியில் பால்குடம் எடுத்த தே.மு.தி.க தொண்டர்கள்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலம் குணமானதை அடுத்து திருச்சி தே.மு.தி.கவினர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.
தே.மு.தி.க
 
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை முடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தமிழகம் திரும்பியுள்ளார். சென்னை திரும்பியுள்ள அவரை பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.இந்நிலையில் விஜயகாந்த் உடல்நலம் குணமடைந்ததையொட்டி, அக்கட்சி தொண்டர்கள் கடவுளுக்கு பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் செலுத்த துவங்கியுள்ளனர்.
விஜயகாந்த்
 
 திருச்சி மாநகர  தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி தே.மு.தி.க மாநகர  செயலாளர் டி.வி.கணேஷ், துணை செயலாளர் ப்ரீத்தா விஜய் ஆனந்த்,  மாணவரணி செயலாளர் மணிகண்டன்,  பகுதி செயலாளர்கள் மோகன், லோகராஜ்,  சாத்தனூர் குமார்,  மார்கெட் சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர். விஜயகாந்த பூரண நலம் பெற்றதை தொடர்ந்து  கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட  தேமுதிகவினர், இன்று காலை திருச்சி அய்யாளம்மன் காவிரி ஆற்றுபடித்துறையில் இருந்து திருச்சி உறையூர் வெட்காளி அம்மன் கோவிலுக்கு  பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 
 
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில விசாரணை குழு உறுப்பினர் நடராஜன்,  மாநகர நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன்குமார்,  ஜெயராமன்,  உள்ளிட்ட ஏராளமான தே.மு.தி.கவினர் கலந்துகொண்டனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close