‘நீ.. வாடகை வீட்டுல தான குடி இருக்க?’- போராடிய பெண்ணை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ | Coimbatore ADMK MLA threatens the woman

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (24/02/2019)

‘நீ.. வாடகை வீட்டுல தான குடி இருக்க?’- போராடிய பெண்ணை மிரட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அர்ஜுனன் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன்

 

கோவை மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலையறிந்த  தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். எம்.எல்.ஏ-விடம் அப்பகுதி மக்கள் சரமரியாக கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ  அம்மன் அர்ஜுனனும் பதிலுக்கு பொது மக்களிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். 

இருதரப்பினரிடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ பொது மக்களிடம் கடுமையாக  பேச  அங்கு பதட்டம் அதிகரித்தது.  அப்போது  தண்ணீர் கேட்டு போராடிய  பெண்ணிடம், "நீ வாடகை வீட்டில் குடியிருக்க… இப்டி பேசினால்  உனக்கு வீடு கிடைக்காது என்று எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்டுத்தியது. பிறகு தண்ணீர் தருவதாகச் சொல்லி அந்த பகுதி மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close