புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல் | Stalin's comfort for the family of Sivachandran who died in the Pulwama attack

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (24/02/2019)

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்,அளித்து. நிவாரணத் தொகையாக 2 லட்சம் வழங்கினார்.

                                                 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் அவாந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதியன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

                                                        

இதில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவச்சந்திரன் என்பவரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 

                                                 
புல்வாமா தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிவச்சந்திரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தி.மு.க சார்பில் சிவச்சந்திரன் குடும்பத்திற்கு 2லட்சம் நிவாரண தொகையை வழங்கியும் ஆறுதல் கூறிவிட்டு திருச்சி நிகழ்ச்சிக்குக் கிளம்பினார். 


[X] Close

[X] Close