`உடல்நலம் விசாரிப்பு மட்டுமில்லை;  அரசியலும் பேசப்பட்டது' - பிரேமலதா விஜயகாந்த்! | premalatha vijayakanth speaks about dmdk alliance talk

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (24/02/2019)

`உடல்நலம் விசாரிப்பு மட்டுமில்லை;  அரசியலும் பேசப்பட்டது' - பிரேமலதா விஜயகாந்த்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

விஜயகாந்த் - ஸ்டாலின்

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வையும் இடம்பெறச் செய்ய வேண்டும் எனப் பா.ஜ.க முயற்சித்துவருகிறது. இதற்காகத் தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் பியூஷ் கோயல் விஜயகாந்தைச் சந்தித்தார். தொடர்ந்து தமிழகக் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசினர்.  ஆனால் இந்த சந்திப்புகளின் முடிவில் திருநாவுக்கரசரை தவிர்த்து, ஸ்டாலினும், ரஜினிகாந்தும், ``விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை. உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தோம்" எனக் கூறினர்.

இதற்கிடையே, சென்னையில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தே.மு.தி.கவின் ஒட்டு மொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். எங்கள் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைப்போம். தே.மு.தி.கவுடன் கூட்டணி வைக்கத் தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயன்று வருகின்றன. ஏற்கெனவே டிடிவி தினகரன், கமல்ஹாசன் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை. ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.கவின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க பலத்தை நிரூபிக்கும்" என்றவரிடம், விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்தபோது அரசியல் பேசப்பட்டதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

பிரேமலதா

அதற்கு, ``அரசியலுக்கு அப்பாற்பட்டு தி.மு.க எங்களோடு நல்ல நட்போடு இருந்தவர்கள் தான். ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக கேப்டனை சந்தித்துள்ளார். அதற்கு எங்களது நன்றிகள். ஆனால் தேர்தல் என்று வரும்போது தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்றே அனைவரும் நினைப்பார்கள். இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனர். அதில் வெறும் உடல்நலம் விசாரிக்கிறது மட்டும் கிடையாது. ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டது. எங்களுக்கும் தி.மு.கவும் தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது. அரசியல் ரீதியாக ஆட்சி ரீதியாக இருவரும் கருத்துகளை தெரிவித்திருக்கிறோம். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close